உலக செய்திகள் செய்திகள் நேபாளத்தில் விபத்து…இந்தியர்கள் 14 பேர் பலி…!!! Sathya Deva23 August 2024079 views நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் 40 பேருடன் இந்திய பயணிகள் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பஸ் பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது காலை 11.30 மணியளவில் மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர். “UP FT 7623 என்ற எண் கொண்ட பஸ் ஆற்றில் விழுந்து ஆற்றின் கரையில் கிடக்கிறது என்று டிஎஸ்பி தீப்குமார் ராயா உறுதிபடுத்தினார். இந்நிலையில் ஆற்றில் கவிழ்ந்த பஸ்சில் பயணித்த 40 இந்தியர்களில் 14 பேர் பலியான நிலையில் இதுவரை 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.