நேபாளத்தில் விமான விபத்து…18பேர் பலி

நேபாள நாட்டில் காத்மாண்டுவில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து போக்கார புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை 11 மணி அளவில் புறப்பட்ட சௌரியா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் போக்ராவுக்கு செல்ல டேக் ஆஃ ப் ஆகும்போது விபத்தில் சிக்கியது.

இந்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட 19 பேர் இருந்தனர் என கூறப்படுகிறது.இதில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தை இயக்கிய விமானி அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து களத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்கள் விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறைகளில் மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றன என கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!