உலக செய்திகள் செய்திகள் நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து….5 பேர் பலி…!!! Sathya Deva7 August 2024072 views நேபாளம் காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் பைனஸ்டி என்கிற ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இந்த ஹெலிகாப்டர் நுவாகோட் மாவட்டத்திலுள்ள சூர்யா சவுர்- 7 என்ற மலையில் மோதி உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு இந்த ஹெலிகாப்டர் அதிகாரிகள் உடனான தொடர்பை புறப்பட்ட மூன்று நிமிடங்களின் இழந்தாக கூறப்படுகிறது. இந்த விபத்தினால் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது .இதில் 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் மீட்பு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.