Home செய்திகள் நேபாளம் விபத்து….27 பேர் பலி…பிரதமர் மோடி நிவாரணம்…!!!

நேபாளம் விபத்து….27 பேர் பலி…பிரதமர் மோடி நிவாரணம்…!!!

by Sathya Deva
0 comment

நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியர்கள் உள்பட 40 பேருடன் பொக்ராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து நேற்று காலை 11.30 மணியளவில் மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து, படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக இருந்த நிலையில், பிறகு பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், நேபாளம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ” நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் நடந்த விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.