நைட் கிளப்பில் துப்பாக்கி சூடு… 3பேர் பலி…

அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தின் இண்டியாநோலா தேவாலய தெருவில் உள்ள நைட் கிளப்பில் நேற்று நள்ளிரவு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிளப்பின் வாசலில் பலர் நின்று கொண்டிருந்தபோது அவர்கள் மீது நடந்த இந்த துப்பாக்கி சண்டையால் 19 வயது இளைஞன் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் காயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பது சகஜமான உள்ள நிலையில் மளிகை கடைகளில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது போன்று குண்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற அளவுக்கு வந்துள்ளது.எனவே அங்குவன்முறைகள் சகஜமாகி வருவதாக அந்நாட்டு மக்கள் கூறி வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!