சினிமா செய்திகள் செய்திகள் பண மோசடி…. நீதிமன்றம் உத்தரவு…. தீவிர விசாரணையில் அமலாக்கத்துறை….!! Gayathri Poomani16 June 2024064 views தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிய ‘மஞ்சு மெல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்கள் முதலீட்டுக்காக 7 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு தன்னை ஏமாற்றி இருப்பதாக அரூரில் வசிக்கும் ஹமீது புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த கொச்சி நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் இப்படத்தை தயாரித்த பரவா ஃபிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு மோசடி செய்து இருப்பதாக கேரளா உச்ச நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இதில் பரவா ஃபிலிம்ஸ் ஒரு ரூபாய் கூட ஹமீதுக்கு வழங்கவில்லை என பொய்யான தகவல்களை கூறி அவருடன் ஒப்பந்தம் செய்து பணம் பெற்றிருப்பதாக புகாரில் குறிப்பிட்டு இருக்கின்றனர். இதனை எடுத்து மஞ்சு மெல் பாய்ஸ் திரைப்படத்திற்காக முதலீடாக 7 கோடி பெற்று முறைகேடு செய்துள்ளதாக இருந்த புகாரின் அடிப்படையில் இப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் ஷோபின் ஷாஹிரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் கொச்சியில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றிருந்த நிலையில் அடுத்த கட்ட விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டுமென அதிகாரிகள் ஷோபினிடம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.