ஜம்மு காஷ்மீர் போடா மாவட்டத்தில் உள்ள தேசா வனப்பகுதியில் பயங்கரவாத குழுக்கள் பதுங்கி இருந்தனர். இதைப் பற்றி தகவல் அறிந்த காவல்துறை ராஷ்டிரிய ரைபிள்ஸ் பாதுகாப்பு படையினருடன் வந்து திங்கட்கிழமை இரவு வனப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் படைவீரர்களை நோக்கி சுட்டனர் .
இதனால் பதிலுக்கு படைவீரர்களும் தீவிரவாதிகளை நோக்கி சுட தொடங்கினர். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் வீரர்கள் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.