உலக செய்திகள் செய்திகள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி… உளவுத் துறையினர் எச்சரிக்கை…!!! Sathya Deva14 August 2024075 views நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி டெல்லியில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதனால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. அது போன்று முக்கியமான பல நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் சுதந்திர தினத்திற்கு முன்பு அல்லது அடுத்த நாள் டெல்லியில் குண்டுவெடிப்பு நடத்த சதி திட்டம் செய்திருப்பதை உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனை குறித்து உளவுத்துறையினர் மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் டெல்லி மற்றும் பஞ்சாபில் நாசவேலைக்கு பயங்கரவாதிகள் முயற்சி செய்யக்கூடும் என்று உளவுத் துறையினர் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.