சிவகங்கை மாவட்ட செய்திகள் பலத்த காயங்களுடன் சாலையில்.. மருத்துவமனையில் உயிரிழப்பு.. காரணம் என்ன.? dailytamilvision.com17 April 20240123 views கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே இருக்கும் மேல்பாறையில் சென்ற நான்காம் தேதி 45 வயது மதிப்புடைய ஒரு நபர் பலத்த காயங்களுடன் கிடந்த நிலையில் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் அவரது பெயர், விவரங்கள் குறித்து தெரியவில்லை. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவர் யார்? மது அருந்திவிட்டு கீழே விழுந்து காயம் அடைந்தாரா அல்லது வேறு காரணம் ஏதேனும் இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.