இராமநாதபுரம் மாவட்ட செய்திகள் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து…. பயணிகளின் நிலைமை என்ன?…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!!! dailytamilvision.com17 April 2024096 views தஞ்சாவூரிலிருந்து அரசு பேருந்து ஒன்று ராமநாதபுரம் வந்தது. இதையடுத்து அந்த பேருந்து நேற்று இரவில் ராமேசுவரம் செல்வதற்காக 40 பயணிகளுடன் புறப்பட்டது. பெருங்குளம் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் பலர் படுகாயமடைந்து அலறினர். அதன்பின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் படுகாயமடைந்த 25 பேர் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.