திருவள்ளூர் மாவட்ட செய்திகள் பழச்சாறு குடித்து வாந்தி, மயக்கம்…. 14 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி….!! dailytamilvision.com17 April 20240192 views திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்துள்ள ஆரூர் பகுதியில் சிறுவர் சிறுமிகள் சிலர் தங்கள் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் களைத்து போன அவர்கள் பழச்சாறு குடிக்கலாம் என்று முடிவு செய்தனர். அதற்காக அவர்களாகவே பழச்சாறு தயார் செய்தபோது அதனுடன் ஜெல் சிலிக்கான் ஐஸ் கட்டியை சேர்த்துள்ளனர். இதையடுத்து தயார் செய்த பழச்சாறை சிறுவர் – சிறுமிகள் குடித்த நிலையில் சிறிது நேரத்திலேயே ஒவ்வொருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவர் – சிறுமிகளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.