பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வாழும் மேல் குர் அம் மாவட்டத்தில் உள்ள போஷேரா கிராமத்தில் கடந்த 5 நாட்களாக மோதல்கள் நடந்து வருகின்றன. போஷேரா, மலிகேல், தண்டர் உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் இஸ்லாம் ஷியா பிரிவை பின்பற்றும் பழங்குடியினருக்கும் சன்னி பிரிவைப் பின்பற்றும் பழங்குடியினருக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் வந்துள்ளன அதனை அரசு பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் பேசி வைத்துள்ளது.
இந்த நிலையில் போஷாரா கிராமத்தில் கடந்த 4 நாட்கள் முன் நிலத்தகராறு காரணமாக மீண்டும் இரு குழுக்கள் இடையே வன்முறை வெடித்துள்ளது. இவர்கள் துப்பாக்கிகள், ராக்கெட் லான்சர்கள் என நவீன ஆயுதங்களை பயன்படுத்தி இரண்டு தரப்பும் சண்டையிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு மட்டும் பெரிய தாக்குதல்கள் நடந்துள்ளன. இது தாக்குதல்களில் 36 பேர் உயிரிழந்ததாகவும் 122 பேர் படுகாயம் அடைந்தனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தக் கலவரத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ள நிலையில் கலவரத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர்.