உலக செய்திகள் செய்திகள் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்…அமெரிக்கா பயணம்…!!! Sathya Deva21 August 20240107 views அமெரிக்கா பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 23 முதல் 26 ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பயணத்தின் போது ராஜ்நாத் சிங் அமெரிக்கா பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டினை சந்திக்க உள்ளதாகவும் மேலும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்காக அமெரிக்கா அதிபரின் உதவியாளர் ஜாப் சல்லிவனையும் சந்திப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பயணத்தின் போது இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என கூறப்படுகிறது. இவர் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருடனும் கலந்து உரையாடுகிறார் என குறிப்பிடப்படுகிறது.