செய்திகள் மாநில செய்திகள் பாபா கோவில் சுவர் இடிந்து பலியானவர்களுக்கு மோடி இரங்கல்….நிவாரண நிதி வழங்கிட உத்தரவு…!!! Sathya Deva5 August 2024081 views மத்திய பிரதேசத்தில் கன மழை பெய்து வருவதால் சுவரிடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு இந்த ஆண்டு மட்டும் மழை தொடர்பான சம்பவங்களின் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். ஷாபூரில் உள்ள ஹர்தெளஸ் பாபா கோவிலில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மோடி அவர்கள் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பாபா கோவிலில் நடந்த விபத்து எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 பிரதமர் நிவாரண நிதியாக வழங்கிட உத்தரவு அளித்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.