உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டி ஆகும். இது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வருகிற 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டியில் 117 இந்திய வீரர்கள்,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தினமும் 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் விழா தொடக்க விழாவில் 45 ஆயிரம் பேர் பாதுகாப்புக்கு அமர்த்தப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும் 18 ஆயிரம் ராணுவ வீரர்களையும் இந்த பாதுகாப்பிற்கு தயார் படுத்தி உள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டி பாதுகாப்பிற்காக இந்தியன் மோப்ப நாய்களும் பாரிஸ் சென்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாய்கள் பத்து நாள் சிறப்பு பயிற்சி பெற்று சிறப்பு கமாண்டர்கள் சி.ஆர்.பி .எப்.பின் உடன் மோப்ப நாய்களும் அங்கு சென்றுள்ளது . ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைதானத்தில் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்தியா -பிரான்ஸ் இடையான ஒப்பந்தத்தில் அடிப்படையில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.