உலக செய்திகள் செய்திகள் பாரிஸ் ஒலிம்பிக்….வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி தேர்வு…!!! Sathya Deva5 August 20240102 views பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் துப்பாக்கி சூடுதலின் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் பெற்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் -சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் பெற்றது. இந்நிலையில் துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் அனந்த்ஜித் நருகா, மகேஸ்வரி சவுகான் ஜோடி போட்டியிட்டனர். இதில் இந்திய ஜோடி 146 புள்ளிகள் எடுத்து நான்காவது இடத்தை பெற்று வெண்கலம் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றது. வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.