உலக செய்திகள் செய்திகள் பாரிஸில் கூட்டு பாலியல் வன்முறை…வைரலாகும் வீடியோ…!!! Sathya Deva25 July 2024089 views பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஆஸ்திரேலியா நாட்டு பெண் ஜூலை 19 அன்று இரவு பாரிஸில் உள்ள கிளப் மற்றும் பார்களை சுற்றியுள்ளார். அவரை கண்காணித்து வந்த 5 மர்ம நபர்கள் அதிகாலை 5 மணி அளவில் அந்த பெண் தனியாக ஒரு இடத்தில் இருந்துதை கண்டு அந்த பெண்ணை கூட்டு பாலியல் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த கபாப் உணவகத்தின் உள்ளே வந்து அங்கிருக்கும் ஊழியர்களிடம் தனது நிலைமையை எடுத்துக் கூறினார்.https://twitter.com/i/status/1815689954883711387 ஒருவர் கபாப் உணவகத்திற்கு அந்த பெண்ணின் பின்னால் தட்டி விட்டு உணவு ஆர்டர் செய்தார். இந்த நிகழ்வு அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அங்கு உள்ள ஊழியர் போலீசார்க்கு தகவல் கொடுத்தார் . மேலும் அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அந்த பெண் அதிர்ச்சியடைந்து மனக்குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிக்கான உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வரத் தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.