உலக செய்திகள் செய்திகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டி…வெளியேறிய இந்திய ஜோடி…!!! Sathya Deva7 August 2024066 views பாரிஸ் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் இன்று காலை கலப்பு அணிகள் பிரிவுக்கான மாரத்தான் நடை பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் சுராஜ் பன்வார்- பிரியங்கா ஜோடி கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் மொத்தம் 25 ஜோடிகள் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் ஸ்பெயின் ஜோடி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இரண்டாவதாக ஈகுவாடார் ஜோடி வெள்ளிப் பதக்கத்தையும் மற்றும் ஆஸ்திரேலியா வெண்கல பதக்கத்தையும் வென்றது. இதில் இந்திய ஜோடி பந்தய தூரத்தை எட்ட முடியாமல் இடையிலேயே வெளியேறி கடைசி இடத்தை பிடித்தது அதை போல் செங்குடியரசு ஜோடியும் பந்தய தூரத்தை முடிக்க முடியாமல் இடையிலேயே வெளியே வந்தது என குறிப்பிடப்படுகிறது.