உலக செய்திகள் செய்திகள் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற அர்ஷத் நதீம்க்கு…பரிசளித்த மாமனார்…!!! Sathya Deva12 August 20240103 views பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரொக்கப் பரிசு மற்றும் அவர் பெயரில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனார் முகமது நவாஸ் எருமை மாட்டை பரிசாக வழங்கினார்.’மாபெரும் வெற்றி பெற்ற பிறகும் நதீம் தனது கிராமம் மற்றும் அவர் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்கிறார்’ என அவரது மாமனார் பெருமிதமாக தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது.