உலக செய்திகள் செய்திகள் பாரிஸ் ஒலிம்பிக்…அதிக காதல் பிரபோசல்கள் செய்யப்பட்ட தொடர்…!!! Sathya Deva13 August 2024092 views அதிக காதல் பிரபோசல்கள் செய்யப்பட்ட ஒலிம்பிக் தொடர் என்ற சாதனையை படைத்துள்ளது பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தொடர். இதில் 17 நாட்கள் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 9 பிரபோசல்கள் நடைபெற்றுள்ளன.பிரான்ஸ் தடகள வீராங்கனை ஆலிஸ் ஃபினோட் 3000மீ ஸ்டீபிள்சேஸ் சாதனையை முறியடித்து, போட்டிக்கு பிறகு தனது காதலனிடம் பிரபோஸ் செய்து கொண்டாடினார். சீன பேட்மிண்டன் வீரர் லியு யு சென் தங்கம் வென்ற பிறகு ஹுவாங் யா கியோங்கிற்கு பிரபோஸ் செய்தார். பிரெஞ்சு பெண்கள் ஸ்கிஃப் மாலுமிகளான சாரா ஸ்டெயார்ட் மற்றும் சார்லின் பிகோன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று கரை திரும்பியபோது அவர்களது பாட்னர்கள் திருமணத்திற்கு முன்மொழிந்தனர். அமெரிக்க ஒலிம்பியன் ஜஸ்டின் பெஸ்ட், தனது நாட்டிற்காக ரோயிங்கில் முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். அவர் தனது காதலியான லைனி டங்கனுக்கு 2,700 மஞ்சள் நிற ரோஜாக்களுடன் பிரபோஸ் செய்தார் மற்றும் பல பேர் காதலில் விழுந்துள்ளார். நிறைவு விழாவின்போது பேசிய பாரீஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டு குழுத் தலைவர் டோனி எஸ்டன்குட், அன்பின் இந்த உணர்வுகள் என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.