பாரிஸ் ஒலிம்பிக்….இந்தியா காலுறுதிக்குள் நுழைந்தது…!!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடி ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கிரிஷ் காமத், ருமேனியா ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 11- 9, 12 -10, 11- 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது. இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மணிகாபத்ரா 3-0 என்ற கணக்கில் வென்றார்.

இதன் மூலம் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது. 3 வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 2-3 என தோல்வி அடைந்தார். இதன் மூலம் இந்தியா 2 -1 என முன்னிலை பெற்றது. 4வது சுற்றில் இந்தியாவின் அர்ச்சனா காமத் 1-3 என தோல்வி அடைந்தார். இதன் மூலம் இரு அணிகளுக்கும் 2-2 என சமநிலை வகித்தனர். இறுதியில் வெற்றியாளர் நிர்ணயிக்கும் 5வது சுற்று நடந்தது. இது இந்தியாவின் மணிகா பத்ரா அபார வெற்றி அடைந்தார். இதையடுத்து இந்தியா ருமேனியாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலுறுதிக்குள் நுழைந்தது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!