பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் 206 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இதில் இந்தியா இதுவரை 4 வெண்கலம் ஒரு வெள்ளி என 5 பதக்கங்களை வென்றுள்ளது. நேற்று நடந்த ஈட்டியறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கத்தை வென்றார். இதனால் இவருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
நீரஜ் சோப்ரா செய்தியாளர்களிடம் பேசியபோது நமது நாட்டுக்காக பதக்கம் கிடைக்கும் போதெல்லாம் நாம் மகிழ்ச்சியாக உணர்கிறோம். இது விளையாட்டை மேம்படுத்துவதற்கான தருணம் அனைவரும் அமர்ந்து விவாதித்து விளையாட்டை மேம்படுத்துவதே தற்போதைய பணி என்று கூறியுள்ளார். நான் இன்னும் சில விஷயங்களைக் கண்டறிந்து அதில் மேலும் உழைப்பை செலுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். நமது தேசிய கீதம் தற்போது இங்கு ஒலிக்காது ஆனால் வருங்காலத்தில் எங்காவது ஓரிடத்தில் அது நிச்சயமாக ஒலிக்கும் என்றும் தெரிவித்தார்.