பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்…எஸ்தோனியா வீராங்கனையை வீழ்த்திய பி.வி.சிந்து…!!!

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து “எம்” பிரிவில் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்று எஸ்தோனியா வீராங்கனை கிரிஸ்டின் கூபாவை எதிர்கொண்டார்.

முதல் சுற்றில் பி.வி சிந்து 21- 5 என்ற புள்ளியில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றில் 21- 10 என கைப்பற்றியுள்ளார். இதனால் 2-0 என எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார் . முதல் கேம்-ஐ கைப்பற்ற 14 நிமிடங்களும் இரண்டாவது கேம்-ஐ கைப்பற்ற 19 நிமிடங்களும் தேவைப்பட்டது. மொத்தமாக இவருக்கு 34 நிமிடத்தில் பி.வி சிந்து எஸ்தோனியா வீராங்கனையை வீழ்த்தினார். முதல் போட்டியில் மாலத்தீவு வீராங்கனையே 21 -9, 21- 6 என வீழ்த்தியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!