உலக செய்திகள் செய்திகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்…உணர்ச்சிகரமான சம்பவம்…!!! Sathya Deva5 August 2024073 views பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் விளையாட்டுகள் என்பதையும் கடந்து வீரர்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதாக உள்ளது. அந்த வகையில் செர்பிய நாட்டை சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமான நோவா ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் இடையே நடந்த போட்டியானது அத்தகைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த இந்த டென்னிஸ் ஆண்கள் ஒற்றைய பிரிவு இறுதிப் போட்டியில் ஜோகோவிச் 7-6, (7-3), 7-6, (7-2) இந்த செட்களின் ஸ்பெயின் வீரர் அல்காரசை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். கார்லோஸ் வெள்ளி பதக்கம் வென்றார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அல்காரஸிடம் ஜோகோவிச் தோற்ற நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டி அமைந்தது. இது இரு வீரர்களையும் உணர்ச்சி வசப்பட வைப்பதாக அமைந்துள்ளது. பார்வையாளர்கள் இடத்தில் இருந்த தனது மகளை கட்டியணைத்து கோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் தோல்வியால் கார்லோஸ் கண்கலங்கும் காட்சிகளும் ரசிகர்களை கலங்க வைத்தது என்று கூறப்படுகிறது.