உலக செய்திகள் செய்திகள் பாரீஸ் ஒலிம்பிக்…உலக சாதனை படைத்த வீராங்கனை…!!! Sathya Deva9 August 20240127 views பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நள்ளிரவு 12.55 மணிக்கு பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை லெவரோன் சிட்னி மெக்லாக்லின் புதிய உலக சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 50.37 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் அவர் 50.65 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து மெக்லாக்லின் புதிய சாதனை நிகழ்த்தினார். மற்றொரு அமெரிக்க வீராங்கனை அனா காக்ரெல் 51.87 வினாடியில் கடந்து வெள்ளியும், நெதர்லாந்தை சேர்ந்த பெமே போல் 52.15 வினாடியில் கடந்து வெண்கலமும் கைப்பற்றினர்.