உலக செய்திகள் செய்திகள் பாரீஸ் ஒலிம்பிக்…95 மீட்டர்களைதாண்டுவதே தனது இலக்கு…பாகிஸ்தான் வீரர்…!!! Sathya Deva9 August 20240116 views பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியா ஒரு வெள்ளியும், 4 வெண்கலமும் வென்றுள்ளது. நேற்று நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். வெள்ளி வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இது அர்ஷத் நதீமமுக்கான நாள் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 1984 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் பாகிஸ்தான் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 11 பதக்கங்களை வென்றுள்ளது பாஸ்கிதான். தற்போது ஈட்டியெறிதலில் முந்திய வீரர்களின் ரெக்கார்டுகளை தகர்த்தெறிந்து 92.97 மீட்டர் ரெக்கார்டை பதிவு செய்து தங்கம் வென்றுள்ள அரஷத் நதீம் , 95 மீட்டர்களை தாண்டுவதே தனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.