செய்திகள் மாநில செய்திகள் பாஸ்டேக் ஒட்டாவிட்டால் இரு மடங்கு கட்டணமா..? தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு…!! Sathya Deva19 July 2024080 views தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சில தகவல்களை வெளியிட்டுயுள்ளது. அந்த குறிப்பில் நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உட்பட்ட சுங்கவரி சாவடி வழியாகச் செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக முன்பக்க கண்ணாடியில் “பாஸ்டேக்” ஒட்டி இருக்க வேண்டும் என கூறியுள்ளது . அப்படி ஒட்டாமல் இருந்தால் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. இதில் பல வாகனங்கள் காருக்குள் “பாஸ்டேக்” ஸ்டிக்கரை வைத்து கொண்டு சாவடி கடக்கும் போது அதை கையில் எடுத்து முன் பக்க கண்ணாடியில் காட்டுகின்றனர். இதனால் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது . இதனை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இரு மடங்கு கட்டணம் தொடர்பான அறிவிப்பை சுங்கச்சாவடியின் முன் பகுதியில் பெரிய அளவில் எழுதி வைக்க எனவும் கூறுகிறது. பாஸ்டேக் ஸ்டிக்கரை காரின் முன் பகுதில் கண்ணாடியில் உள்பக்கமாக ஒட்ட வேண்டும் என்று விதி ஏற்கனவே உள்ளதாகவும் கூறப்படுகிறது.