Home செய்திகள்உலக செய்திகள் பாஸ்போர்ட் ஆன்லைன் போர்டல்….5 நாட்களுக்கு மூடப்படும் என தகவல்…!!!

பாஸ்போர்ட் ஆன்லைன் போர்டல்….5 நாட்களுக்கு மூடப்படும் என தகவல்…!!!

by Sathya Deva
0 comment

புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க அல்லது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நாடு முழுவதும் உள்ள மையங்களில் விண்ணப்பம் செய்ய பாஸ்போர்ட் சேவா போர்டல் பயன்படுத்தப்படுகிறது. முன்பதிவு செய்யப்பட்ட நாளில், விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் மையங்களுக்குச் சென்று சரிபார்ப்புக்காக தங்கள் ஆவணங்களைவழங்க வேண்டும். இதைத்தொடர்ந்து, போலீஸ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. பின்னர் விண்ணப்பதாரரின் முகவரிக்கு பாஸ்போர்ட் சென்றடைகிறது.விண்ணப்பதாரர்கள் வழக்கமான நடைமுறையைத் தேர்வு செய்யலாம். அதில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரரை 30-45 வேலை நாட்களுக்குள் சென்றடையும்.

இந்த நிலையில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான ஆன்லைன் போர்டல் பராமரிப்பு பணிக்காக அடுத்த ஐந்து நாட்களுக்கு மூடப்படும் என அரசு தெரிவித்துள்ளது.இந்தக் காலக்கட்டத்தில் புதிய முன்பதிவு (Appointment) எதுவும் திட்டமிடப்பட முடியாது. மேலும் முன்பதிவு செய்யப்பட்டவை மாற்றியமைக்கப்படும்.பாஸ்போர்ட் சேவா போர்டல் தொழில்நுட்ப பராமரிப்புக்காக இன்று முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை செயல்படாதுஇது வழக்கமான நடைமுறை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.