பாஸ்போர்ட் தர பட்டியல்…இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரிமா…!!!

லண்டனில் செயல்பட்டு வரும் ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் அமைப்பு உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை வெளியிட்டது. இந்த ஆண்டு ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்ற தர வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 6 நாடுகள் உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளனர். அதில் ஒன்று சிங்கப்பூர் என கூறப்படுகிறது.

பிரான்ஸ் ,இத்தாலி ,ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகியவை இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 192 நாடுகளுக்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது. அல்லது அந்த நாடுகளுக்கு பயணித்து அங்கு சென்று இருந்தது விசா பெற்றுக் கொள்ளலாம். ஆஸ்திரேலியா, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் ஸ்வீட ன் ஆகியவை மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடுகிறது. இந்த நாடுகளுக்கு பாஸ்போர்ட் மூலம் 191 நாடுகளுக்கு பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

இதில் இந்தியா,செனகல் ,தஜிகிஸ்தான் 82 வது இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய பாஸ்போர்ட் பயன்படுத்தி இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!