சினிமா செய்திகள் தமிழ் சினிமா பிரசாந்த் நடிக்கும் ”அந்தகன்”…. ரிலீஸ் தேதி அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu19 July 20240100 views தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”அந்தகன்”. இந்த திரைப்படம் இந்தியில் வெளியாகி வரவேற்பு பெற்ற அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, பிரியா ஆனந்த், ஊர்வசி, கே. எஸ். ரவிக்குமார், மனோபாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், கலை இயக்குனராக செந்தில்ராகவன் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.