உலக செய்திகள் செய்திகள் பிரதமர் மோடி…உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்…!!! Sathya Deva23 August 20240111 views உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் தோளில் கைபோட்டு தனது அன்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். அரசு முறை பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு, போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார். ரஷியா உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 30 ஆண்டுகள் கழித்து உக்ரைன் சென்ற முதல் இந்திய பிரமதர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.