பிரதமர் மோடி அவர்கள் இந்த மாதம் தொடக்கத்தில் ரஷ்யா சென்றார். அப்பொழுது ரஷ்யா அதிபர் புதினும் பிரதமர் மோடியும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி அவர்கள் அடுத்த மாதம் ஆகஸ்டு 23ஆம் தேதி உக்ரைன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அவர் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேச உள்ளார். இரு தலைவர்களும் உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. பிரதம மோடி போர் நடந்த பிறகு முதல் முறையாக உக்ரைன் செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த மாதம் இத்தாலியில் நடந்த ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடியும் ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.