பிரதமர் மோடி உரை…விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜ்…!!!

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மிக நீண்ட உரையினை நேற்றைய தினம் நிகழ்த்தினார். அவரது உரையில், எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் இதை விமர்சிக்கும் வகையில் நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்று வருகிறது. மோடியின் உரையைப் பகிர்ந்து அவர், மணிப்பூர் முதல் கன்னியாகுமரி வரை விடுதலையாகி வெளியே உள்ள பாலியல் குற்றவாளிகள் தற்போது சிரித்துக் கொண்டுள்ளனர். எப்போது நீங்கள் சொல்வதுபோல் நடந்து கொல்லப்போகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!