நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் 11ஆவது முறையாக தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி. அப்போது அவர் நாட்டு மக்களிடம் பேசியதாவது விமானப்படை, ராணுவம், கடற்படை மற்றும் விண்வெளி துறை உள்ளிட்ட பல துறைகளில் பெண்களின் தலைமைத்துவத்தை நாடு காண்கிறது, ஆனால் சில கவலையான சம்பவங்களும் நடைபெறுகின்றன எனக் கூறியுள்ளார், எனது கவலையை செங்கோட்டையில் வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்த கோபத்தை நான் உணர்கிறேன் என்றும் நாடு, சமூகம், நமது மாநில அரசுகள் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த தண்டனையில் குற்றவாளிகள் பயப்படும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.