“பிறந்தநாள் பரிசுக்கு நன்றி”… நடிகர் தனுஷ் வெளியிட்ட பதிவு… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் தனுஷ் அவரின் 50வது படமான ”ராயன் படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவரின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் இவர் நன்றி தெரிவித்தார். அந்த வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் ”மக்கள் – பிரஸ்- மீடியா மற்றும் என்னுடன் துணையாக இருக்கும் தூண்கள் மற்றும் எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள். இதுதான் என்னுடைய மிகச்சிறந்த பிளாக்பஸ்டர் பிறந்தநாள் பரிசு. ஓம் நமச்சிவாய” என தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?