செய்திகள் மாநில செய்திகள் பீகாரில் பரபரப்பு…5 வயது சிறுவன் கையில் துப்பாக்கியா…? Sathya Deva1 August 2024062 views பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோன் போர்டிங் பள்ளியில் 5 வயது மாணவன் தனது பையில் துப்பாக்கியை மறைத்து கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளான். அந்த மாணவன் மூன்றாம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்தனர். மேலும் துப்பாக்கியால் சுட்ட மாணவன் மற்றும் அவரது தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். சிறுவன் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? என விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகளை சோதனை செய்ய போலீசார் அறிவுறுத்தியுள்ளார்.