பீகாரில்…3 வது முறையாக இடிந்த பாலம்…!!!

பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலம் 3 வது முறையாக இடிந்து விழுந்ததுள்ளது. பீகார் மாநிலம் கஹரியா மாவட்டத்தில் சுல்தான்கஞ்ச் – குவானி கட் பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் 9 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடத்து வருகிறது.

பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டுகளில் 2 முறை இடிந்து விழுந்த இந்த பாலத்தின் பகுதி இன்று 3 வது முறையாக இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களாகவே பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து வரும் நிலையில் தற்போது இந்த பாலம் கங்கை ஆற்றில் இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!