செய்திகள் மாநில செய்திகள் பீகார் மாநிலம்…850 கோடி மதிப்புள்ள கதிரியக்க பொருள் கலிபோர்னியம் கடத்தல்…!!! Sathya Deva10 August 20240114 views அணுகுண்டு தயாரிக்க உதவும் ஆபத்தான கதிரியக்க பொருள் கலிபோர்னியம். கதிரியக்கத்தைச் சார்ந்த பொருட்களுக்கு அதிக கட்டுப்பாடு விதிக்கப்படுவது வழக்கம். ஏனென்றால் அவை மற்ற உலோகங்கள் போல இருக்காது. முறையாகக் கையாளவில்லை என்றால் புற்றுநோய் பாதிப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது. எனவேதான் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில், பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் என்ற பகுதியில் சுமார் 50 கிராம் கலிபோர்னியத்தை மாநில சிறப்பு அதிரடிப் படை குச்சாய்கோட் போலீசாருடன் இணைந்து நடத்திய வாகன சோதனையின்போது இதை பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு மட்டும் ரூ.850 கோடியாகும். இதை கடத்த முயன்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.