செய்திகள் மாநில செய்திகள் பீடி பிடித்தவரின் அலட்சியம்…மளமளவென எரிந்த தீ…!!! Sathya Deva21 August 2024076 views ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் பீடி பிடித்தவரின் அலட்சியத்தால் ஒரு சில நிமிடங்களில் ஆந்திராவில் கடை ஒன்று சாம்பலாகியுள்ளது. அனந்தபூர் மாவட்டத்தில், பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து நபர் ஒருவர் ஐந்து லிட்டர் பெட்ரோலை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால், பெட்ரோல் கேனில் இருந்து பெட்ரோல் லீக் ஆகியுள்ளது. இதனால், பெட்ரோல் பங்க் சாலையில் இருந்து பெட்ரோல் கசிந்துள்ளது. அப்போது, சாலையின் கடையோரம் நின்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர் பீடி பிடித்துள்ளார். அப்போது, தீ பீடியில் பற்ற வைத்து தீக்குச்சியை சாலையில் எறிந்த நொடி, தீ பற்றிக்கொண்டது. இதனால், தீ மளமளவென அருகில் உள்ள சாலையோர கடைகள் மற்றும் வாகனங்கள் மீது வேகமாக பரவியது. அதற்குள், கடையில் தீ பரவி பலத்த சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.