உலக செய்திகள் செய்திகள் புதன் கிரகத்துக்குள் வைரமா…? விஞ்ஞானிகளின் ஆய்வு… Sathya Deva25 July 2024097 views நமது சூரிய குடும்பத்தில் முதலாவது கிரகம் புதனாகும். இந்த கோள் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அதிக வெப்பம் மிகுந்த கிரகமாக உள்ளது. இந்த சூரிய கிரகத்துக்குள் மிக அதிக அளவில் வைரம் இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு இது தெரியவந்துள்ளது. இந்த புதன் கிரகத்தின் மேற்பரப்பின் கார்பன்,சிலிக்கா மற்றும் இரும்பு கலவைகள் இருப்பதாகவும் இவற்றுக்குள் அடியில் 14 கிலோமீட்டர் தடிமனில் வைரம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த வைரத்தை சுலபமாக வெட்டி எடுக்க சாத்தியமில்லை என்று “நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்” என்ற அறிவியல் இதழின் தகவல் வெளியாகி உள்ளது.