உலக செய்திகள் செய்திகள் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது…இந்தியாவின் ரோகித் சர்மா 2-வது இடம் பிடித்துள்ளார்…!!! Sathya Deva14 August 2024070 views ஒருநாள் போட்டி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்திலும், இந்தியாவின் ரோகித் சர்மா 2-வது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் 3வது இடத்திலும், விராட் கோலி 4வது இடத்திலும் உள்ளதாக கூறப்படுகிறது. ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் முதல் இடத்தில் உள்ளார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் 4-வது இடம் பிடித்துள்ளார். பும்ரா 8வது இடத்தில் உள்ளார். ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசையில் வங்கதேசத்தின் முகமது நபி முதல் இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் இந்திய வீரர் ஒருவர் கூட இடம்பெறவில்லை. ஜடேஜா 16வது இடத்தில் உள்ளார் என குறிப்பிடப்படுகிறது.