சினிமா செய்திகள் தமிழ் சினிமா புதிய படத்தில் கமிட்டான விஷ்ணு விஷால்…. போஸ்டருடன் வெளியான அறிவிப்பு…!!! Sowmiya Balu17 July 20240120 views தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தற்போது இவர் பிரவீன் இயக்கத்தில் ”ஆர்யன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து, பேச்சுலர் திரைப்படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ”ஓர் மாம்பழ சீசனில்” என தலைப்பு வைத்துள்ள இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கின்றனர். இந்நிலையில், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த படம் தொடர்பான போஸ்டர் ஒன்றையும் படகுழுவினர் வெளியிட்டுள்ளனர்.