பிரபல ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் புதிய கரிஷ்மா XMR பைக்கின் விலையை உயர்த்துவதாக தற்போது அறிவித்துள்ளது. அதன்படி இந்த பைக்கின் விலை ரூ. 7000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பைக் ரூ.1,72,900 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது விலை உயர்வுக்குப் பிறகு ரூ. 1,79,900 ஆக இருக்கிறது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய கரிஷ்மா பைக்கில் இளைஞர்களை கவரும் விதத்திலான பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கூர்மையான ஹெட் லைட்டுகள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட் ஸ்கீரின், மெல்லிய சைடு பேரிங்குகள் போன்றவைகள் உள்ளது. இதனுடன் 210 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு மற்றும் நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் போன்றவைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 25.15 எச்பி பவர் மற்றும் 20.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும் இதனுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், ஸ்லிப்ட், அசிஸ்ட் கிளட்ச் போன்றவைகளும் வழங்கப்பட்டுள்ளது.