யூனியன் பிரதேசமான புதுவையில் கவர்னர் தான் அரசு என்றும் நிர்வாகி என்றும் அழைக்கப்படுகின்றனர். தற்போது புதிய கவர்னராக கைலாஷ்நாதர் பதவி ஏற்க உள்ளார். இவர் நேற்று மதியம் 12 மணியளவில் புதுவைக்கு வந்தார் என கூறப்படுகிறது. அவரை முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இன்று கவர்னர் மாளிகையில் புதிய கவர்னர் பதவியேற்பு விழா நடந்தது. இதற்காக கவர்னர் மாளிகை வளாகத்தில் மேடையும் பந்தலும் விருந்தினர் அமர இருக்கையும் அமைக்கப்பட்டிருந்தது.
கைலாஷ்நாதர் சபைக்கு வந்ததும் தேசிய கீதத்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது. இதே தொடர்ந்து புதுவை தலைமைச் செயலாளர் சரத் சவுகான் புதிய கவர்னராக கைலாசநாதர் நியமிக்கப்பட்டதற்கான ஜனாதிபதியின் உத்தரவை வாசித்தார். பின்னர் சென்னை ஹைகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் புதிய கவர்னர் கைலாஷ்நாதனுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது. புதிய கவர்னருக்கு அனைத்து அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.