உலக செய்திகள் செய்திகள் புது வீடு கொடுத்த பிரபலம்….ஆச்சிரியத்தில் பெண்…!!! Sathya Deva23 July 20240112 views ஏழைகளுக்கு உணவு, உடை கொடுத்து பலரும் உதவி செய்வார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த சமூக பிரபல ஊடர்கர் ஒருவர் வீடு இல்லாமல் இருந்த ஒரு பெண்ணுக்கு சொந்தமாக வீடு வாங்கி கொடுத்துள்ளார். இணையதளத்தில் இசாஹியா கிராஸா என்ற பயனர் பகிர்ந்து வீடியோவில் அவர் தனது வாகனத்தில் ஒரு பெண்ணை வாழ்த்தும் காட்சிகள் உள்ளது. அப்பொழுது அந்த பெண்ணிடம் ஒரு பரிசு பையை கொடுத்து திறக்க சொல்கிறார். அந்தப் பையின் வீட்டு சாவி இருந்தது அப்போது நான் உங்களுக்கு ஒரு குடியிருப்பை தருகிறேன் என கூறியுள்ளார். அந்த பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. தொடர்ந்து அந்த பெண்ணை புது வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அந்த வீட்டில் படுக்கை வசதி, டிவி, போன்ற வசதிகள் இருந்தது. அந்தப் பெண் கூறும்போது பத்தாண்டுகளுக்கு மேலாக வீடு இல்லாமல் தெருவில் வாழ்ந்து வந்தேன். இந்த வீடு என்னை ஆச்சரியப்படுத்துகிறது எனக் கூறியுள்ளார். இது ஒரு அழகிய தருணம் இதை என்னால் மறக்க முடியாது எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் 200 மில்லியன் பார்வைகளை பெற்றதன் விளைவாக ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார் அவரது இந்த பதிவு 1.10 கோடிக்கு மேல் பார்வைகளையும் ஒன்பது லட்சம் விருப்பங்களையும் குவிக்கிறது. பயனர்கள் இசாஹியா கிராஸாவை வாழ்த்து பதிவிட்டு வருகிறன்றனர்.