உலக செய்திகள் செய்திகள் பும்ரா ஆக்சனில் பந்து வீசிய பெண்…வைரல் வீடியோ…!!! Sathya Deva17 August 20240130 views இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் கடந்த மாதம் இறுதியில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்காக சிறப்பாக செயலாற்றி இருந்தார். தொடர் முழுதும் தனது மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்தி இருந்த அவர் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடரின் நாயகன்விருதைப் பெற்று அசத்தினார். தற்போது பும்ரா ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், இவரது ஆக்சனில் பந்து வீசுவதை சிறுவர்கள் ஆர்வமாக கொண்டுள்ளனர். நிறைய சிறுவர்கள் பும்ரா பவுலிங் ஆக்சன் மூலம் டிரெண்டாகி உள்ளனர். https://twitter.com/i/status/1824823133486145626 அந்த வகையில் தற்போது ஒரு சிறுமி பும்ரா ஆக்சனில் பந்து வீசி அசத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் இந்த வீடியோவை பதிவிட்டு, இந்த சிறுமிக்கு வழிகாட்ட வேண்டும் என பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் பும்ரா ஆக்சனில் பந்து வீசுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.