செய்திகள் மாநில செய்திகள் புற்று நோயினால் இளம்பெண் உயிரிழப்பு…. மக்கள் பதற்றம்…!! Sathya Deva19 July 2024068 views இந்தியாவில் புற்றுநோய் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. இது 2010 ஆம் ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் புற்று நோய்க்கு பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு 16 லட்சத்தை எட்டி விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் டி – சீரிஸ் இணை உரிமையாளரும் நடிகருமான கிருஷ்ண குமாரின் மகள் திஷா குமார் இவர் புற்றுநோயார் பாதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு வயது 20 என்று கூறப்படுகிறது. இவர் மும்பையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு ஜெர்மனிக்கு சென்று தொடர் சிகிச்சையில் ஈடுபட்டார் என குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திஷா உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். புற்றுநோய்க்கு இளம்பெண் பலியானது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.