Home செய்திகள் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கு…அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு…!!!

பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கு…அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு…!!!

by Sathya Deva
0 comment

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் மருத்துவ சேவை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலக் காவல்துறை தலைவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு வருவதாக என தெரிவிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.