செய்திகள் மாநில செய்திகள் பெண் மருத்துவர் பலாத்காரம்…சஞ்சய் ராய் கைது…கல்லூரி முதல்வர் ராஜினாமா…!!! Sathya Deva13 August 20240114 views மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய்என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு காரணமானவர்களே தண்டிக்க கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளை செய்ய நியமிக்கப்பட்ட நபர் சஞ்சய் ராய் என கூறப்படுகிறது. இவர் கடந்த 8 ம் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவரை பலாத்காரம் கொலை செய்துள்ளார். அந்த சஞ்சய் ராயின் செல்போனின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மேற்கு பாஜகவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். இது பற்றி மம்தா பானர்ஜி கூறுகையில் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மேற்கு வங்க போலீசார் கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த கொலை தொடர்பாக அக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.