பெய்ரூட் நகரில் சத்தம் எழுப்பிய போர் விமானம்….பயத்தில் மக்கள்…!!!

ஹஸ்மாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. அதேபோல் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர் ராணுவ கமாண்டர் ஃபவத் சுக்ர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் என ஹிஸ்புல்லா கூறியுள்ளது. மேலும் ஹிஸ்புல்லாவை ஈரான் பின்புறத்தில் இருந்து இயக்கி வருகிறது. இதனால் லெபனானில் இருந்து இஸ்ரேலை ஈரான் ஆதரவுடன் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய நேரப்படி இன்று மாலை 7:30 மணிக்கு ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா உரையாற்றினார்.

இஸ்ரவேல் போர் விமானம் 30 நிமிடத்திற்கும் 3 முறை சத்தம் எழுப்பியவாறு பெய்ரூட் நகரில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பொது இடங்களில் இருந்த மக்கள் சிதறி அடித்து பாதுகாப்பான இடத்திற்கு ஓடினர். பெய்ரூட்டில் உள்ள படாரோ மாவட்டத்தில் உள்ள கஃபேயில் மக்கள் சிதறி எடுத்து ஓடியதை பார்க்க முடிந்தது என ராய்ட்டர்ஸ் ரிப்போர்டர் தெரிவித்துள்ளார். மோசமான நிலை நிலவி வருவதால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!